அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைக்க மாட்டோமா? அங்கு ஒரு படிப்போ, வேலையோ, வாழ்க்கையோ கிடைக்காதா? என ஏராளமான இந்தியர்கள் ஏங்கிக் காத்திருக்கின்றனர். ஆனால், அந்நாட்டுக்கு மீண்டும் அதிபரானால்கூட டிரம்பால் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது. அது ஏன் தெரியுமா?
ஹஸ் மணி வழக்கில் குற்றவாளியானது தான். 2016-ம் ஆண்டு ஆபாசப் படங்களில் நடித்த ஸ்டோர்மி டேனியல்ஸ்-க்கு பணம் கொடுத்த வழக்கில் 34 குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன.
அந்த வழக்கில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலும், அவருக்கு தண்டனைகள் ஏதும் வழங்கவில்லை என நீதிபதி அறிவித்துவிட்டார். அத்தோடு, நிபந்தனையற்ற விடுதலையையும் கொடுத்துவிட்டார்.
பதவியேற்புக்குப் 10 நாட்களுக்கு முன் வழங்கப்பட்ட இந்த பரபரப்பான தீர்ப்பு டிரம்புக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. டிரம்ப் பதவியேற்கும் உயர்பதவிக்கு மதிப்பு கொடுத்து இத்தகைய முடிவை அறிவித்தார் நீதிபதி. அத்துடன் மீண்டும் அதிபராகும் டிரம்புக்கு தனது வாழ்த்துக்களையும் அவர் கூறியிருந்தார்.
என்னதான் இருந்தாலும் இந்த வழக்கில் டிரம்ப் ஒரு குற்றவாளி என்பது நிரூபணமானது. தண்டனை வழங்கப்படாவிட்டாலும் குற்றவாளி குற்றவாளிதான். சில நாடுகள் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபர்களை தங்களது மண்ணில் அனுமதிக்க மறுத்து அவமதிக்கும். இது நாடுகளின் அயல்நாட்டுக் கொள்கை விவகாரங்களில் முக்கியமான ஒரு ஷரத்து.
அந்த கொள்கையை இந்தியாவும்தான் பின்பற்றுகிறது. அப்படிப் பார்த்தால், அமெரிக்க அதிபராகவே ஆனாலும் டிரம்பால் இந்திய மண்ணில் மீண்டும் காலடி எடுத்து வைக்க முடியாது. இந்தியா மட்டுமல்ல.
கனடா, லண்டன், ஜப்பான், பிரேசில், சீனா, இஸ்ரேல், கம்போடியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கியூபா, ஈரான், கென்யா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, தைவான் அத்தோடு அமெரிக்கா ஆகிய நாடுகளும் அயல்நாட்டுக்கு குற்றவாளிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்காது என்ற விதியைக் கொண்டுள்ளது.
இதில் ஜப்பான், இஸ்ரேல், இந்தியா, இங்கிலாந்து, சீனா, அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு முதன்றை அதிபராக இருந்தபோது அவர் வருகை தந்திருந்தார். மேலும் 22 நாடுகள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட காலத்தில் ஆக்டிவ் கிரிமினலாக இல்லாவிட்டால் அவர்களை அனுமதிக்கும்.
அடுத்த ஆண்டு கனடாவில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. அதில் டிரம்ப் பங்கேற்க அந்நாடு அனுமதிக்குமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.