Monday, March 31, 2025

எக்குத்தப்பாக சிக்கிய டிரம்ப்! பரபரப்பை கிளப்பும் ஸ்கிரீன்ஷாட்! பொறிகலங்கிய அமெரிக்க பாதுகாப்பு துறை!

ஏமன் மீது தாக்குதல் நடத்துவது பற்றிய Plan-ஐ சிக்னல் எனும் மெசேஞ்சரில் அமெரிக்க அதிகாரிகள் பகிர்ந்திருப்பது தற்போது கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லா தாக்குதலையும் பக்காவாக திட்டமிட்ட டிரம்ப் தலைமையிலான அதிகாரிகள், கடைசியில் “யானைக்கும் அடி சறுக்கும்” என்ற கதையாக தக்குதல் திட்டம் லீக் ஆவதற்கும் அவர்களே காரணமாக இருந்திருக்கின்றனர்.

Signal செயலியை பொறுத்தவரை மிகவும் பாதுகாப்பான மெசேஜிங் App-ஆக இருந்து வரும் நிலையில் இதில் பகிரப்படும் மெசேஜ்களை எளிதில் Hack செய்யப்பட்டு உளவுபார்க்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது. எனவே அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் இந்த செயலி பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 11ம் தேதி சிக்னல் App-ல் Group ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு ‘Houthi PC small group’ என பெயரும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் தவறுதலாக The Atlantic இதழின் ஆசிரியரான ஜெஃப்ரி கோல்ட்பெர்க்-ஐ இந்த குரூப்பில் இணைத்திருக்கிறார். இக்குழுவில் ஏற்கெனவே, அமெரிக்க துணை அதிபர் JD வான்ஸ், பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், தேசிய புலனாய்வு இயக்குனரான துல்ஸி காபார்ட், CIA இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் போன்ற முக்கிய அதிகாரிகள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

அந்த Group-பில் மார்ச் 13ம் தேதி ஏமன் மீது நடத்தப்பட வேண்டிய தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 15 அன்று தாக்குதல் பற்றிய நேரம், விமானங்கள், திட்டம், குறிக்கோள்கள் போன்ற விவரங்கள் பகிரப்பட்டதை தொடர்ந்து தாக்குதலும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.

ஆனால், நேற்று இந்த Chat-கள் தொடர்பான அனைத்து ஸ்கிரீன்ஷாட்களும் The Atlantic இதழில் வெளியாகி அனல் பறக்கும் பேசுபொருளானது தான் தாமதம்.. அமெரிக்க பாதுகாப்புத்துறை ஒட்டுமொத்தமாக பொறிகலங்கிவிட்டது என்றே சொல்லலாம். நடத்தப்படவிருக்கும் தாக்குதல் திட்டத்தை வெளியில் கசியாமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதில் டிரம்ப் தரப்பு கோட்டை விட்டிருப்பது அமெரிக்க மக்கள் மத்தியில் அரசுக்கு எதிராக கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்று கூறப்படுவது முற்றிலும் உண்மையே.

Latest news