14 வருடங்களுக்கு பிறகு விஜயுடன் இணையும் த்ரிஷா!

51
Advertisement

திங்கள் கிழமையன்று சென்னை AVM ஸ்டுடியோஸில் தளபதி 67 படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

நிகழ்வின் போது புகைப்படங்கள் லீக் ஆவதை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

தயாரிப்பு நிறுவனமான 7 Screen Studios விரைவில் படத்தில் நடிக்க உள்ளவர்களின் பட்டியலையும், நிகழ்வின் புகைப்படங்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என தெரிவிக்கபட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், த்ரிஷா பூஜைக்கு வந்ததாகவும் தளபதி 67இல் நடிக்க உள்ளதாகவும் பிரபல சினிமா விமர்சகர்கள் ட்வீட் செய்துள்ளனர்.

2004ஆம் ஆண்டில் கில்லி  மற்றும் 2008ஆம் ஆண்டு குருவி படத்தில் இணைந்து நடித்த விஜயும் த்ரிஷாவும் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த படத்தில் இணைய உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.