90s கிட்ஸின் பேவரைட் சொடக்கு தக்காளி.
இப்போதுள்ள குழந்தைகள் இந்த சொடக்குத்
தக்காளியைப் பற்றி அறிந்திருக்கும் வாய்ப்பு
மிகக் குறைவு.
இதை ஒரு வகை மூலிகை எனவும் சொல்லலாம்.
கிராமப்புற வீடுகளின் அருகிலோ, வயல்வெளிகளிலோ
சாலையோரங்களின் அருகிலோ சர்வசாதாரணமாகப்
படர்ந்து கிடக்கும் இந்தச் செடி இப்போது காணாமல்
போய்விட்டது என்றே கூறலாம்.
அதிகம் காய்த்து குலுங்கிக்கொண்டிருக்கும் இந்த
சொடக்குத் தக்காளி மிகுந்த சுவையுடையது.
90s கிட்ஸ்க்கு இது ஒரு விளையாட்டுப் பொருள்.
இந்த சொடக்குத் தக்காளியைப் பறித்து மற்றவர்
நெற்றியில் வைத்து உடைத்து விளையாடுவர்.
அது உடையும்போது சுடக்குபோடுவதுபோல் சத்தம்
கேட்கும். இந்த சொடக்கு சத்தத்தைக் கேட்டு அளவிலா
ஆனந்தம் கொள்வர் சிறுவர். அதனால் இதற்கு சொடக்குத்
தக்காளி என்றே பெயர்.
இதன் இலைகளையும் பழங்களையும் மஞ்சள் சேர்த்து
அரைத்து சருமக் கட்டியின்மீது பூசிவந்தால் கட்டிகள்
எளிதாகக் கரைந்துவிடும். கட்டியினால் ஏற்படும் வலியும்
குறையும்.
இதன் இலைகளையும் காய்களையும் நசுக்கி ஒரு டம்ளர்
தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் மஞ்சள்
பொடியையும் சேர்த்து சிறிது நேரம் கழித்து வடிகட்டிக் குடித்து
வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மூட்டு வலியுள்ளவர்கள் சொடக்குத் தக்காளி தின்றுவந்தால்
மூட்டுவலி காணாமல் போய்விடும்.
புற்றுநோய் பாதிப்பு குறைய சொடக்குத் தக்காளி தின்னலாம்.
இதைவிட சிறப்பு…
மாணவர்களுக்கு இது ஓர் அற்புத மருந்து. தொடர்ந்து சொடக்குத்
தக்காளி தின்றுவந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
செரிமான சக்தியை அதிகரிக்கும் ஆற்றல்கொண்டது சொடக்குத்
தக்காளி. சொடக்குத் தக்காளியின் மருத்துவப் பலன்களை உணர்ந்து
கொண்ட வெளிநாட்டினர் ஒரு கிலோ சொடக்குத் தக்காளியை 3 ஆயிரம்
ரூபாய்க்கு விற்பதாகச் சொல்கிறார்கள்.
நம்ம ஊரிலோ ஓசியிலேயே கிடைக்கிறது- எனவே, தாராளமாக
சொடக்குத் தக்காளி சாப்பிடுங்க… திடகாத்திரமா செயல்படுங்க…
அபார ஞாபக சக்தியோடு கம்ப்யூட்டருக்கு டஃப் பைட் கொடுங்க.