Tuesday, December 9, 2025

Trending-இல் கலக்கும் Vegan டயட்! மறைந்திருக்கும் ஆபத்து?

இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்கில் பலர் “வீகன் (Vegan) டயட்” எனப்படும் உணவுமுறையைத் தேர்வு செய்கின்றனர். இதன் பொருள், மாமிசம், முட்டை, பால், பன்னீர், தேன் போன்ற எந்தவொரு விலங்கு சார்ந்த உணவுப் பொருளும் உட்கொள்ளப்படாது என்பதாகும்.

அதற்கு பதிலாக காய்கறி, பழம், பருப்பு வகைகள், தானியங்கள் மற்றும் தாவரச் சார்ந்த புரத உணவுகள் மட்டும் உட்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் இன்று உலக வீகன் நாளாக கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய உணவுமுறை, அதிக கொழுப்பை குறைத்து உடல் எடையை கட்டுப்படுத்துவதோடு, இதய நோய் மற்றும் நீரிழிவு அபாயத்தை குறைக்கும் என சில ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், மிருகங்களை பாதுகாக்கும் நடைமுறையையும், புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் சுற்றுப்புற சூழலுக்கு இணக்கமான அணுகுமுறையையும் “Vegan டயட்” வலியுறுத்துகிறது.

ஆனால் இதன் எதிர்மறை பக்கங்களும் குறிப்பிடத்தக்கவையே. மிருகச் சார்ந்த உணவுகளை தவிர்ப்பதால் உடலுக்கு தேவையான புரதம், வைட்டமின் B12, இரும்புச் சத்து, மற்றும் கால்சியம் குறைவடையும் அபாயம் உள்ளது. இதனால், இத்தகைய உணவுமுறையைத் தொடங்கும் முன் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனை அவசியமாகிறது.

வீகன் டயட் அனைவருக்கும் பொருந்தாது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் உடல்நல பாதிப்பில்லாமல் இதைத் தொடர மருத்துவ கண்காணிப்பு நிச்சயம் தேவை.

மொத்தத்தில், “Vegan டயட்” ஆரோக்கியத்திற்கான ஒரு மாற்று பாதையாகக் கருதப்பட்டாலும், அதைச் சரியான திட்டமிடலுடன் பின்பற்றுவது மட்டுமே நன்மை அளிக்கும்.

Related News

Latest News