சாலையில்  30 கி.மீ தூரம்  “முயலை இழுத்துச்சென்ற கார்”

34
Advertisement

காட்டு பாதை சாலைகளில் விலங்குகள் சாலைகளை கடப்பதும், சில நேரங்களில்  வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதும் தவிர்க்கமுடியாத ஒன்றாக உள்ளது.

இந்நிலையில்,லண்டனில் நெடும்சாலையில் சென்று கார் ஒன்று சாலையை கடக்க முயன்ற முயலை மோதியுள்ளது,இதில் சுவாரசியம் என்ன என்றால் அந்த முயல் உயிரிழக்கவில்லை.மாறாக 30   கி.மீ தூரம்  காரின் முன் பக்கத்தில் இருக்கும் கிரில் பகுதியில் சிக்கி இழுத்துவரப்பட்டுள்ளது.

Advertisement

நெடுஞ்சாலையில், நபர் ஒருவர் காரில் சென்றுள்ளார் , ஒருகட்டத்தில் ஏதோ மோதியது போல சத்தம் கேட்டுக்குள்ளது.கண்ணாடியை பார்த்துவிட்டு எதும் இல்லை என காரை தொடர்ந்து ஓடியுள்ளார் அந்த நபர்.

சில மணிநேரம் கடந்துசெல்ல சாலையில் பயணித்த சக பயணிகளில் ஒருவர், உங்க காரின் முன் முயல் ஒன்று சிக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.உடனே காரை நிறுத்துவிட்டு முன்னே சென்று பார்த்தபோது,காட்டு முயல் ஒன்று கிரில் பகுதியில் முகம் வெளிப்புறத்திலும், உடம்பு உள் புறத்திலும் சிக்கியுள்ளது.

முதலில் முயல் இறந்துவிட்டது என நினைத்த அந்த நபர், முயலை மீட்டபோது,ஆச்சிரியம் அளிக்கும்விதம் முயலின் மூக்கில் செலான இரத்தம் மட்டுமே வந்துள்ளது.மத்தபடி நன்றாகவே இருந்த முயலை அருகே உள்ள காட்டில் விட்டுச்சென்றார் அந்த நபர்.