மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜ் செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. ரயிலில் இடம் பிடிப்பதற்காக பயணிகள் செய்த அட்டூழியங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கூட்டம் அதிகம் நிறைந்த ரயில் வியாபாரி ஒருவர் தனது கூடையில் உணவு பொருளை வைத்துள்ளார். அப்போது அங்கிருந்த பயணிகள் கூடையில் இருந்த உணவை திருடி சாப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.