சென்னை – கும்மிடிப்பூண்டி இடையேயான ரயில் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி தடத்தில், இன்று முதல் 31 வரை, இரண்டு மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட உள்ளது.
சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும், இரவு 11:20 சேவை, கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் இடையே இயக்கப்படும், இரவு 9:25 மணி ரயில் சேவை, இன்று முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது