Friday, August 1, 2025

இந்தியாவை துரத்தும் சோகம் ; மீண்டுமொரு மோசமான சாதனை

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் போட்டி தற்போது ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கருண் நாயர் மீண்டும் உள்ளே வந்திருக்கிறார்.

ஆச்சரியமாக சாய் சுதர்சனையும் நீக்காமல் அணியில் சேர்த்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதேபோல இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர் இருவரும் விலகி இருக்கின்றனர்.

இதையடுத்து இங்கிலாந்து கேப்டனாக ஒல்லி போப் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்தநிலையில் 5வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியே டாஸ் வென்றுள்ளது. கேப்டன் சுப்மன் கில் 5வது முறையும் டாஸ் வெல்லவில்லை.

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், தொடர்ச்சியாக 15 முறை இந்திய அணி டாஸ் தோற்று, மோசமான உலக சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி 1999ம் ஆண்டில் தொடர்ச்சியாக 12 முறை டாஸ் தோற்று வரலாறு படைத்தது.

தொடர்ந்து இங்கிலாந்து அணி 2022-23ம் ஆண்டில் 11 முறை டாஸ் தோற்று சாதனை படைத்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளை காட்டிலும் இந்தியா தான் இந்த லிஸ்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News