சென்னை தேனாம்பேட்டையில் மேம்பால பணிகள் காரணமாக, நாளை முதல் (ஆகஸ்ட் 17) சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா சாலையில் உள்ள சைதாப்பேட்டையிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அண்ணா சாலையை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா சாலையிலிருந்து திநகர் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தியாகராய சாலை நோக்கி சென்று இலக்கை அடையலாம் என்றும் அண்ணா மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் விஜயராகவ சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.