கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தற்போது குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக வந்து கொண்டிருக்கிறது. வார நாட்களில் கூட்டத்தை காட்டிலும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் பண்டிகை விடுமுறை தினங்களை கழிக்க குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் வரத் தொடங்கியுள்ளனர்.
தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மெயின் அருவிக்கரையில் தற்போது நூற்றுக் கணக்கான சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலில் ஈடுபட்ட வருகின்றனர்.