டேட்டிங் செல்வதில் சென்னை மாநகரம் இந்தியாவிலேயே
முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கான பிரபலமான டேட்டிங் செயலி ஒன்று
கொரோனா இரண்டாவது அலைக்குப்பின் 2000 இந்தியர்களிடம்
2021 ஆம் ஆண்டு,ஜுன் மாதம் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் பல விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதில், இரக்கம், உணர்வுரீதியான பண்புகள் ஆகியவை
டேட்டிங் செய்வதில் முக்கியத்துவம் பெற்றுள்ளன..
மேலும், டேட்டிங் சென்றபிறகு நம்பிக்கை மற்றும் தெளிவு
காரணமாகப் புத்துணர்வு அதிகரிக்கிறதாம்.
இந்த ஆய்வில் இன்னும் பல சுவாரஸ்யத் தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.
டேட்டிங் செல்லும் ஐந்துபேர்களில் ஒருவர் திருமணம்
செய்துகொள்ள விரும்புகிறார்களாம்.
அந்த வகையில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது.
அடுத்த இடம் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் இந்தியா முழுவதும் நீக்கப்பட்டுவிட்டதால்
மூன்றில் ஒரு இந்தியர் டேட்டிங் செல்வதில் விருப்பம் கொண்டுள்ளனராம்.
டேட்டிங் செல்வதற்குமுன் வீடியோமூலம் ஒருவரையொருவர் தெரிந்துகொள்கின்றனராம்.
நீண்ட பயணங்கள், ஹோட்டலில் உண்பது, அருகிலுள்ள
ரெஸ்ட்டாரென்ட் அல்லது டீக்கடைக்குச் செல்வது,
பூங்கா அல்லது சுற்றுப்புறத்தில் நடைப்பயணம் மேற்கொள்வது,
தியேட்டருக்குச் செல்வது போன்றவை டேட்டிங் செல்வதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.
இந்தக் கணக்கெடுப்பில் டேட்டிங் சென்றபிறகு ரொமான்டிக் செய்வது
அதாவது, காதல் உணர்வு அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில்
பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.
இதில் சென்னை மற்றும் புனே நகரங்கள் முதலிடம் பிடித்துள்ளன.
டெல்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்கள் அடுத்தடுத்து உள்ளன.
அப்படியே ஒரு ரொமான்டிக் லுக் விடுங்க பார்க்கலாம்….
.யப்பா ஆள விடு சாமி…. நான் சிங்கிளாகவே இருந்துட்டுப் போறேன்….