Saturday, March 15, 2025

வத்தலகுண்டு அருகே அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே புதிதாக திறக்கப்பட இருந்த சுங்கச்சாவடியை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் எந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நான்கு வழி சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை சுங்கச்சாவடியை திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அங்கு வந்த மக்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த அனைத்து உபகரணங்களும் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இதனால் வத்தலகுண்டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு நிலவி வருகிறது.

Latest news