இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் காணப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிரடியாக உயர்ந்த நிலையில், மறுநாள் ரூ.360 குறைந்தது.
இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.59,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.