தங்கத்தின் விலை நேற்று, சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.1,05,360க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,170க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ரூ.1,06,240க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை தொடர்ந்து அதிரடி காட்டிவருகிறது. ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.15,000 அதிகரித்து ரூ.3,07,000-க்கும், கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.307-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
