https://www.instagram.com/tv/CbMfI9xpQjC/?utm_source=ig_web_copy_link
பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளருக்கு கிடைத்த
அதிர்ஷ்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான ஒரு வீடியோ ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ளது.
அந்த வீடியோக் காட்சியில் வாடிக்கையாளர் எவரும்
இல்லாத நேரத்தில் ஒரு பெட்ரோல் பங்கில் அதன்
ஊழியர்கள் இருவர் ஜாலியாக விளையாடுகின்றனர்.
அப்போது ஊழியர் ஒருவரின் பணப்பை கீழேவிழுகிறது.
அதனைக் கவனியாமல் அவர்களிருவரும் மகிழ்ச்சியில்
திளைக்கின்றனர். அந்த நேரத்தில் ஸ்கூட்டரில் அங்குவந்த
வாடிக்கையாளர் ஒருவர், கீழே கிடந்த அந்தப் பணப்பையை
காலுக்கு அடியில் மறைத்துக்கொள்கிறார்.
ஊழியர்கள் பார்க்காத நேரத்தில் கீழே குனிந்து அந்தப்
மணிப்பர்சை எடுத்துக்கொள்ளும் அவர், பெட்ரோல்
நிரப்பாமல் வாகனத்தில் விரைந்துசெல்கிறார்.
இந்தக் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கீழே கிடந்த அந்த மணிப் பர்சை பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம்
கொடுக்காத நேர்மையற்ற செயலை கண்டித்துவருகின்றனர்.