திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 1ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
அந்த பள்ளியின் வகுப்பறையில் ஜன்னலிலும் மாணவர்கள் உட்காரும் நாற்காலியிலும் மனிதக் கழிவை யாரோ வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள், தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தனர்.
பள்ளி மாணவர்களே இச்செயலில் ஈடுபட்டார்களா? அல்லது மர்ம நபர்களா? என பல்லடம் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.