ஆடைகளை எளிதாக இஸ்திரி போட்டு சுருக்கங்களை நொடியில் நீக்க உதவும் டிப்ஸ்…!

159
Advertisement

அலுவலகத்திற்கு செல்பவர்கள் தாங்கள் அணியும் ஆடைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அதைத் தான் ஆள் பாதி ஆடை பாதி என்ற வாசகம் கூறுகிறது.

எனவே ஆடைகளை துவைத்து நன்கு ஐயர்ன் செய்து போடுவது மிகவும் அவசியம் ஆகும்.
மேலும் துணிகளை துவைக்கும் வேலையை வாசிங் மிஷின் செய்கிறது, ஆனால் அதனை இஸ்திரி போடும் வேலையை மனிதர்கள் தான் செய்ய வேண்டும், ஆனால் பலர் அதிக சுருக்கம் உள்ள ஆடைகளை இஸ்திரி போடுவதற்குச் சிரமப்படுவார்கள், மேலும் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள், இதனால் எளிய முறையில் இஸ்திரி போடும் வழிகளை தெரிந்துக் கொள்வோம்.
அதிக சுருக்கம் உள்ள ஆடைகளை இஸ்திரிபோட நிறைய நேரம் எடுக்கும்.

மேலும், பலமுறை அழுத்தினாலும் சுருக்கங்கள் சரியாகப் போகாது. இதனால் அந்த ஆடைகள் மீது லேசாகத் தண்ணீர் தெளித்து , ஆடைகளை நன்கு விரித்து சாதாரண அழுத்தத்தில் தேய்த்து எடுத்தால் சுருக்கங்கள் நீங்கிவிடும்.
முதலில் லேசான அடைகள் மற்றும் அடர்த்தியான ஆடைகள் என தனித்தனியாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது சாதாரண வெப்பத்தில் லேசான துணிகளை முதலில் அயர்ன் செய்யவும். பின்னர் வெப்பம் தானாக நன்கு அதிகரித்தப் பிறகு அடர்த்தியான ஆடைகளை இஸ்திரி போடுங்கள்.

இவ்வாறு செய்வதால் சுருக்கங்கள் அதிகம் உள்ள ஆடைகளை நீங்கள் அழுத்தி அழுத்தி இஸ்திரி போடத் தேவை வராது.
சில நேரங்களில் ஜரிகை ஆடைகளை இஸ்திரி போட நிறைய நேரம் எடுக்கும். எனவே இந்த ஆடைகளை இஸ்திரி போடுவதற்கு, ஒரு செய்தித்தாளை எடுத்து அதன் நடுவில் துணியை வைக்கவும். அதன் பின் நடுத்தரமான வெப்பத்தில் துணியை இஸ்திரி போட்டால் சரிகை துணிகளை எளிய முறையில் இஸ்திரி போட முடியும்.