அமராவதி முதல் AK 62 வரை: அஜித்தின் 30 ஆண்டு திரைப்பயணம்

308
Advertisement

செல்வா இயக்கத்தில் ‘அமராவதி’ படத்தின் மூலம் அறிமுகமான அஜித், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக முப்பது வருடங்கள் தனது திரைப்பயணத்தை தொடர்வார் என்று அஜித் உட்பட யாரும் நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

‘ஆசை’ பட வெற்றியினால் தன்னை திரும்பி பார்க்க வைத்த அஜித், அதன் பிறகு சில சுமாரான படங்களில் நடித்தார். அகத்தியன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘காதல் கோட்டை’ மூன்று தேசிய விருதுகளை வென்று கவனம் ஈர்த்தது.

97இல் இருந்து 99ஆம் ஆண்டுகளில் கணிசமான வரவேற்புள்ள படங்களில் நடித்து வந்த அஜித், எஸ்.ஜே. சூர்யாவின் ‘வாலி’யில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்த படங்கள் கைகொடுக்காத நிலையில், ‘பில்லா’ ‘மங்காத்தா’ போன்ற படங்களில் class ஆன gangster ஆக அசத்தினார் அஜித்.

‘வேதாளம்’, ‘விவேகம்’ என மீண்டும் action படங்களில் நடித்தாலும், குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த ‘விஸ்வாசம்’ படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக வெளியான ‘வலிமை’ கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

எச்.வினோத் இயக்கத்தில் AK 61உம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK 62 உம் அடுத்து வெளிவர உள்ள அஜித்தின் இரண்டு படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் முப்பது வருட திரைப்பயணத்தை நிறைவு செய்ததற்காக , ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.