கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்குலியிடம், அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் கடைசி சர்வதேச போட்டியா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவிக்க மாட்டேன் என்ற கங்குலி, ஒரு நாள் கிரிக்கெட்டில், விராட் கோலியும், ரோகித்தும் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும், ஒரு நாள் போட்டியில் இருவரின் சாதனை தனித்துவமானது என தெரிவித்தார்.