”பாலியல் ரீதியான டார்ச்சர் கொடுக்குறாங்க”

355
Thoothukudi
Advertisement

பாலியல் தொந்தரவு கொடுத்த அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் துணை இயக்குனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ தம்பதியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில், வனிதா-ஆனந்த் தம்பதியினர்  மருத்துவர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

அந்த மருத்துவமனையில் பணியாற்றிவரும் அலுவலக கண்காணிப்பாளர் ராஜா மற்றும் உதவி இயக்குனர் போஸ்கோ ராஜா இருவரும் கூட்டாக சேர்ந்து பல்வேறு முறைகேடுகள் செய்வதாகவும், அதற்கு துணை போகாத மருத்துவ தம்பதியினரை பழிவாங்க துறை ரீதியான நடவடிக்கை எடுத்ததாகவும், மேலும் பாலியல் ரீதியான டார்ச்சர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

எனவே, இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மருத்துவ தம்பதியினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தனர்.