2040ம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை இது தான்! உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த நிபுணர்கள்!

இந்தியாவில் தங்கம் என்பது ஒரு சாதாரண உலோகம் அல்ல; அது சுப நிகழ்வுகளின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பிறந்தநாள் முதல் திருமணம் வரை பல விசேஷங்களில் தங்கம் பரிசாக வழங்கப்படும் வழக்கம் நிலவுகிறது. ஆனால் சமீப காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பொதுமக்கள் அதை வாங்குவதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.


கடந்த பத்து ஆண்டுகளில் தங்கம் விலை உயர்ந்த விதத்தைப் பார்த்தால், எதிர்காலத்தில் தங்கம் வாங்குவது சாதாரண மக்களுக்கு மிகவும் கடினமானதாக மாறலாம் என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பணவீக்கம், உலக பொருளாதார மாற்றங்கள், ரூபாயின் மதிப்பு குறைதல் மற்றும் சர்வதேச அரசியல் பதற்றங்கள் போன்ற காரணிகள் தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர்த்துகின்றன.


நிதி நிபுணர்களின் கணிப்பின்படி, வருடாந்திர வளர்ச்சி விகிதம் 8 முதல் 10 சதவீதம் வரை நீடித்தால், 2040ம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.4.20 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உயரக்கூடும். சிலர் இது ரூ.6 லட்சத்தையும் எட்டும் என மதிப்பிடுகின்றனர்.


பணவீக்கம் அதிகரிப்பதும், உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளும் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மாற்றுகின்றன. மேலும், தங்கத்தின் இயற்கை இருப்பு குறைவதும் விலையை உயர்த்தும் முக்கிய காரணமாக உள்ளது. உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்களின் அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தை அதிகமாக சேர்த்து வருகின்றன.


2040ம் ஆண்டில் ஒரு குடும்ப திருமணத்திற்காக சிறிய நெக்லஸ் வாங்கவே பல லட்சம் ரூபாய் தேவைப்படும் சூழ்நிலை உருவாகலாம். அதனால் டிஜிட்டல் கோல்டு, தங்க ETF, Sovereign (சாவரின்) Gold Bonds போன்ற முதலீட்டு முறைகள் அதிக முக்கியத்துவம் பெறும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related News

Latest News