Monday, July 28, 2025

”இதனால தான் டிரா கேட்டோம்” மொக்கை ‘காரணம்’ சொன்ன ஸ்டோக்ஸ்

மான்செஸ்டரில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியை, இந்திய அணி போராடி டிரா செய்துள்ளது. இதற்கு ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, சுந்தர் இருவரும் தான் முக்கிய காரணம்.

போட்டி கிட்டத்தட்ட டிரா ஆன சமயத்தில் ஜடேஜா 89 ரன்களும், சுந்தர் 80 ரன்களும் எடுத்திருந்தனர். அப்போது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஜடேஜாவிடம் சென்று, போட்டியை இத்துடன் முடித்து கொள்வோம் என கையை நீட்டினார்.

ஆனால் ஜடேஜா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. பின்னர் இருவரும் சதம் அடித்த பிறகே போட்டியை இந்திய அணி டிரா செய்தது. இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டி அளித்துள்ளார். அதில், ” எங்கள் பவுலர்கள் நிறைய களைப்படைந்து விட்டனர். அதனால் தான் போட்டியை டிரா செய்ய சொல்லி கேட்டேன்.

இந்திய அணி போராடி ஆட்டத்துக்குள் வந்து விட்டது. போட்டி டிரா என்னும் நிலைக்கு வந்து விட்டதால், மேலும் எங்களின் பவுலர்களை வைத்து ரிஸ்க் எடுக்க நான் விரும்பவில்லை. இரண்டு அணிகளுமே சிறந்த அணிகள். இந்திய அணி ஆடிய விதத்தை பாராட்டியே ஆக வேண்டும்,” இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த பேச்சு, கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. ” ஜடேஜா, சுந்தரின் சதத்தை தடுக்க தான் நீங்கள் டிரா செய்ய சொல்லி கேட்டீர்கள். நீங்கள் சொல்லும் காரணம் நம்பும்படி இல்லை,” இவ்வாறு விதவிதமாக விமர்சித்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News