கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த அறிக்கையில் என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே விமான விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே எரிபொருள் விநியோகம் தடைபட்டதால் 2 என்ஜின்களும் செயலிழந்ததாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட அறிக்கை தற்போது வெளியான நிலையில் முழுமையான அறிக்கை வர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.