இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பவுலிங், பேட்டிங் இரண்டிலுமே அவர் பெரிதாக சாதிக்கவில்லை. இதனால் 3வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் கில் அவருக்கு அதிக ஓவர்கள் கொடுக்க மறுத்து விட்டார்.
மற்ற பவுலர்கள் 20 ஓவர்களுக்கு மேல் வீசியபோது, ஷர்துல் வெறும் 11 ஓவர்களை மட்டும் தான் வீசினார். இதுகுறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது,” என்னால் மேலும் 2 ஓவர்களை வீசியிருக்க முடியும். ஆனால் கில் எனக்கு ஓவர்கள் கொடுக்கவில்லை.
களத்தில் கேப்டன் எடுப்பது தான் முடிவு,” என்று அதிருப்தி தெரிவித்து இருந்தார். இது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இளம் கேப்டன் என்பதால், கில் மீது தைரியமாக ஷர்துல் குற்றம் சுமத்தி விட்டார். இதுவே ரோஹித் சர்மா, விராட் கோலியாக இருந்திருந்தால் இப்படி செய்திருப்பாரா? என்று கவுதம் கம்பீர் நினைக்கிறாராம்.
அத்துடன் இதை இப்படியே விட்டால் மற்ற வீரர்களும், கில்லை குறை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் எனவே, ஷர்துல் தாகூருக்கு இனி இந்திய அணியில் இடம் கொடுக்க கூடாது என்னும் முடிவை அவர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு BCCIயும் ஓகே சொல்லி விட்டதாம்.
எனவே இந்திய அணியில் இனி ஷர்துலுக்கு இடம் கிடைப்பது கடினம் தான். அவருக்கு 33 வயது என்பதும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.