வெங்காய ஜிலேபி சாப்பிட வாங்க

372
Advertisement

நம்முடைய உணவுக் கலாசாரத்தில் இனிப்புகளுக்குத் தனி இடமுண்டு. விருந்தினர்கள் வருகையின்போது அவர்களை மகிழ்வோடு உபசரிக்க இனிப்புப் பண்டங்களையே முதலில் வழங்குவோம். அதில், பல்லாண்டுகளாகப் பரவலாக இடம்பெற்றிருப்பது ஜிலேபி என்றால் மிகையல்ல.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரின் பிரியமான தின்பண்டம் ஜிலேபி. உளுந்தம் பருப்பு, அரிசி, சர்க்கரை, டால்டா அல்லது நெய் கலந்து செய்யப்படும். மிருதுவாகவும், முறுகலாகவும், அதிக இனிப்புச்சுவையுடனும் இருக்கும் ஜிலேபியை நினைத்தவுடனே நாவில் உமிழ்நீர் ஊறும்.

என்றாலும், நீரிழிவு போன்ற குறைபாடு உள்ளிட்ட வேறுபல காரணங்களால் இனிப்பு ஜிலேபி உண்பதை சிலர் தவிர்ப்பார்கள். அத்தகையோரின் தேவையைப் பூர்த்திசெய்யும் விதமாகத் தற்போது வெங்காய ஜிலேபியைத் தயார்செய்துள்ளனர். இந்த வெங்காய ஜிலேபி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

வெங்காய ஜிலேபி பற்றியத் தகவல் ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

அதில் வெங்காயம், தயிர், மிக்சர் போன்றவற்றைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஜிலேபி அலங்கரிக்கப்பட்டு சாப்பிடுவதற்காகத் தட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்குமுன் சட்னி, தயிருடன் ரசகுல்லா பரிமாறப்படும் காட்சி வைரலான நிலையில், தற்போது வெங்காய ஜிலேபி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க…?