ஜனாதிபதியை பிரதமர் அழைக்காததற்கு இது தான் காரணம்! உடைத்து பேசிய சுமந்த் சி ராமன்..!

82
Advertisement

மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

மரபுப்படி நாட்டின் குடியரசுத் தலைவர் தான் இந்த கட்டடத்தை திறந்து வைத்திருக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளை புறக்கணித்து ஆளும் கட்சி மற்றும் பங்குபெற்ற நிகழ்வும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் சமூக ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் தற்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரை பிரதமர் மோடி விழாவிற்கு அழைக்காததற்கு அவர்கள் பட்டியலினத்தவர்கள் என்பது காரணம் கிடையாது.

அவர்கள் வந்தால் தன் மீது கவனம் குறைந்து விடும். அனைவரின் கவனமும் தன் மீது மட்டுமே இருக்க வேண்டும் என மோடி விரும்புவதாக கூறியுள்ளார். எனினும், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுபடி குடியரசுத் தலைவர்களை அழைக்காதது தேர்தல் நேரத்தில் எதிரொலிக்கும் என தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்ளவில்லை. அவரது உரையை ராஜ்ய சபாவின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங் அவையினர் முன் வாசித்தது குறிப்பிடத்தக்கது.