சேமிப்புக்கான முக்கிய அடையாளமா பார்க்கப்படும் தங்கம் தான். தங்கத்தின் விலை தினம் தினம் ஏறிக்கொண்டேஇருக்கிறது. தற்போது, ரூ.1 லட்சத்தையும் தாண்டி இருக்கிறது. இது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி தகவலாக கருதப்படுகிறது.
அதாவது, ஏப்ரல் மாத தொடகக்த்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்தது.
நேற்றைய விலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,220க்கும், சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,760க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,320க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே, வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.275க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
