Thursday, January 22, 2026

ஹார்ட் அட்டாக் வருவதற்கு 99% காரணம் இதுதான் ! இந்த 4 விஷயத்தை கவனிச்சா உயிர் தப்பலாம்!

ஹார்ட் அட்டாக் திடீரென ஏற்படுகிறது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறான கருத்தாகும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய ஆய்வில், ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கு 99 சதவீதம் முக்கியமான நான்கு காரணங்களே உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவில் சுமார் 90 லட்சம் பெரியவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மருத்துவ உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த ஆய்வின்படி, ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான முதல் மற்றும் மிக முக்கியமான காரணம் உயர் ரத்த அழுத்தம் ஆகும். ஹார்ட் அட்டாக் பாதிக்கப்பட்டவர்களில் 93 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருந்துள்ளது. இது முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

இரண்டாவது காரணம் ரத்தத்தில் அதிக அளவில் உள்ள கொலஸ்ட்ரால் : குறிப்பாக, கெட்ட கொழுப்பு (LDL) அதிகரிப்பது ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தி இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது.

மூன்றாவது காரணம் சர்க்கரை நோய் : ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் இருப்பது இதயத்துக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

நான்காவது முக்கிய காரணம் புகைப்பிடித்தல் : புகைப்பிடிப்பதால் ரத்தக் குழாய்கள் சுருங்கி, இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் ஹார்ட் அட்டாக் அபாயம் அதிகரிக்கிறது.

இந்த ஆய்வில் பங்கேற்ற டாக்டர் பிலிப் கிரீன்லாண்ட் கூறுகையில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது என்பது உண்மையல்ல என்றும், பாதிக்கப்பட்ட அனைவருமே இந்த நான்கு காரணங்களில் குறைந்தது ஒன்றையாவது கொண்டிருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 60 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் வராது என்ற பொதுவான நம்பிக்கை தவறானது என்றும், அவர்களிலும் 95 சதவீதம் பேர் இதே காரணங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் என்னவென்றால், இந்த நான்கு காரணங்களையும் சரியாகக் கட்டுப்படுத்தினால், ஹார்ட் அட்டாக் ஏற்படும் அபாயத்தை பெருமளவு குறைக்க முடியும் என்பதே. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை முறையாக பரிசோதித்து கட்டுப்படுத்த வேண்டும். கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவு பழக்கங்களை பின்பற்ற வேண்டும். புகைப்பிடிப்பதை முழுமையாக கைவிட வேண்டும்.

இவை குணப்படுத்த முடியாத நோய்கள் அல்ல. சரியான விழிப்புணர்வும், வாழ்க்கைமுறை மாற்றங்களும் இருந்தால் இதய நோய்களைத் தவிர்க்க முடியும். நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ, இதயத்தை பாதுகாப்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Related News

Latest News