Tuesday, July 1, 2025

நட்சத்திர வீரர்கள் ‘Missing’ இந்திய ‘பிளேயிங் 11’ இதுதான்?

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, ஜூலை 2ம் தேதி பெர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியை வென்ற இங்கிலாந்து தற்போது அதே பிளெயிங் லெவனுடன் இறங்குவதாக அறிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பிருப்பதால் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்யும் அணிக்கு அதிக வெற்றிவாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. இந்தநிலையில் இந்திய அணி 2வது டெஸ்டில் களமிறக்கும் வீரர்கள் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.

அதன்படி பும்ரா, ஷர்துல், சாய் சுதர்சன், பிரசித் கிருஷ்ணா, முஹம்மது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு இருக்கின்றனராம். அவர்களுக்கு பதிலாக ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறதாம்.

இதன்படி இந்தியாவின் பிளேயிங் லெவனில் கேஎல் ராகுல், யாஜஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், சுப்மன் கில், ரிஷப் பண்ட், நிதிஷ் குமார் ரெட்டி,  வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் குல்தீப் யாதவ் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சரை, இங்கிலாந்து அணி 2வது டெஸ்ட் போட்டியில் களமிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news