சேலம் அருகே கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. காடையாம்பட்டி அருகே தீவட்டிபட்டி பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் தனது தாயுடன் வந்த பெண் ஒருவர் காய்கறி கடை முன் நிறுத்திவிட்டு காய்கறிகளை வாங்கி கொண்டிருந்தார்.
அப்போது இளைஞர் ஒருவர் அந்த பெண்ணின் இருசக்கரவாகனத்தை நோட்டுமிட்டு சிறிது நேரம் கழித்து, ஓட்டிச் சென்றார். இதை பார்த்த அந்தபெண் கூச்சலிடவே இதை பார்த்த பெண் மற்றும் அவரது தாய் உடனடியாக ஆத்திரத்தில் சத்தம் போட்டு உள்ளனர். இதனால் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர் பதற்றமடைந்த நிலையில் வண்டியுடன் தடுமாறி கீழே விழுந்தார்.
கீழே விழுந்த இருசக்கர வாகன திருடனை அந்த பெண் தாக்கியுள்ளார். பின்னர் அந்த நபர் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி தப்பித்துச் சென்றார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.