முதல்வராக பதவியேற்ற பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை, அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று சந்தித்து தவெக தலைவர் விஜய் வாழ்த்து பெற்றார்.
இந்தநிலையில் விஜய் வீட்டுக்கு வந்தபோது துரை வைகோ சொன்ன ஒரு விஷயத்தால் தற்போது புதிய சர்ச்சையொன்று வெடித்துள்ளது. விஜய் வருகையின்போது வைகோ, துரை வைகோ இருவரும் தங்களது வீட்டு உறுப்பினர்கள் மற்றும் பணிப்பெண்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
அப்போது துரை வைகோ பணிப்பெண்களை சுட்டிக்காட்டி, ” இவங்க எல்லாம் விசிலுக்கு தான் ஓட்டு போட்டாங்க,” என்று பெருமையுடன் தெரிவித்தார். அவரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், ” திமுக கூட்டணியில் இருந்த உங்களால் உங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்களை உதயசூரியனுக்கு ஓட்டு போட வைக்க முடியவில்லையா?”, என்று சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
