ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில பிறந்து வளர்ந்த மகேந்திர சிங் தோனி, இன்னைக்கு உலகம் முழுக்க பிரபலமான ஒரு கிரிக்கெட் வீரரா இருக்காரு. வயசானாலும் உங்க அழகும், ஸ்டைலும் கொஞ்சம் கூட மாறலன்னு ரசிகர்கள் சொல்ற அளவுக்கு தன்னை ரொம்ப பிட்டா வச்சுருக்காரு.
கிரிக்கெட்ல மிகப்பெரிய சாதனைகளை படைச்ச தோனி, தன்னோட 39வது வயசுலயே Retirement அறிவிச்சு எல்லாருக்கும் ஷாக் கொடுத்தாரு. நல்ல பார்ம்ல இருந்தப்பவே ஓய்வை அறிவிச்சதால, அடுத்து அவர் என்ன பண்ண போறார்னு எல்லாருமே ஆர்வத்தோட காத்திருந்தாங்க.
இயற்கை முறையில ஆர்கானிக் பண்ணை தொடங்கி விவசாயியா களத்துல இறங்குனாரு. இன்னைக்கு தோனியோட மொத்த சொத்து மதிப்பு 1040 கோடி. கிரிக்கெட்டை விட்டு விலகி 5 வருஷம் ஆனாலும், அவரோட சொத்து மதிப்பு நாளுக்குநாள் ஏறிக்கிட்டே தான் போகுது.
அந்தவகையில தோனி என்னென்ன பிசினஸ்ல எல்லாம், முதலீடு பண்ணி இருக்காருன்னு இங்க பாக்கலாம். Sports Fit Pvt. Ltd அப்படிங்கிற விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனத்துல தோனியும் ஒரு மிகப்பெரிய பங்குதாரரா இருக்காரு.
இதுக்கு அப்புறம் Chennaiyin FC கால்பந்து அணியோட Co – Owner அதாவது இணை உரிமையாளர் தோனி தான். கால்பந்து மட்டும் இல்லாம ஹாக்கியும் இவரோட பேவரைட். ஜார்க்கண்ட் மாநிலத்துல இருக்க Ranchi Rays ஹாக்கி டீம்ல கணிசமா முதலீடு செஞ்சு இருக்காரு.
பைக், கார்கள் மேல தோனிக்கு எக்கச்சக்க காதல் உண்டு. இதனால மஹி ரேஸிங் டீம்னு சொந்தமா ஒரு நிறுவனத்தையே ஸ்டார்ட் பண்ணிட்டாரு. சொந்த ஊரான ராஞ்சியில Mahi Residencyன்னு ஹோட்டல் நடத்துறாரு.
ஆடைகள், காலணிகளை விற்பனை செய்யுற Seven என்னும் நிறுவனமும் தோனிகிட்ட இருக்கு. உணவு நிறுவனமான 7InkBrewsல தோனி மிகப்பெரிய பங்குதாரர். இந்திய Sports Marketing நிறுவனமான Rhiti Sportsலயும் எக்கச்சக்கமா முதலீடு செஞ்சு வச்சிருக்காரு.
இதுக்கு அடுத்து பெங்களூர்ல இருக்க Khatabook அப்படிங்கிற ஸ்டார்ட் அப் நிறுவனத்துல ஏராளமா இன்வெஸ்ட் பண்ணிருக்காரு. மேற்கண்ட நிறுவனங்களோட சேர்த்து இயற்கை முறை விவசாயத்துல கணிசமா லாபம் ஈட்டுறாரு.
இவரோட பண்ணையில விளையுற காய்கறி,பழங்கள் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுது. உச்சத்துல இருக்கும்போதே பக்காவா பிளான் பண்ணி ஏகப்பட்ட தொழில்கள்ள முதலீடு செஞ்சதால தான் இன்னைக்கு எந்த கவலையும் இல்லாம, தனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கையை தோனி வாழ்ந்துட்டு இருக்காரு.
இதனால கிரிக்கெட் மட்டுமில்லாம பிசினஸ்லயும் தான் ஒரு சூப்பர்ஸ்டார்ன்னு Cool Captain நிரூபிச்சிட்டாரு.