வங்கிக் கணக்கைப் பொறுத்தவரையில், பெரும்பாலான மக்கள் சேமிப்புக் கணக்கைக் கொண்டுள்ளனர். ஆனால், வங்கிக் கணக்கில் இந்த முக்கியமான விஷயத்தை மறந்துவிடுகின்றனர். அது என்னவென்றால், உங்கள் வங்கிக் கணக்கில் கேஆய்சி (KYC) சரிபார்ப்பு அவசியம் செய்ய வேண்டும். இல்லையேல், உங்கள் வங்கி கணக்கு செயல்முறை நிறுத்தப்படும்.
செயல்படாத வங்கி கணக்குகள் முடக்கப்படுவதால் அந்தக் கணக்கிலிருந்து பணம் எடக்க முடியாது, வைப்பு செய்வதும், வேறு பரிவர்த்தனைகளும் செய்ய இயலாது. மேலும், அந்தக் கணக்கு Google Pay, PhonePe, Paytm போன்ற UPI செயலிகளுடன் இணைக்கப்பட்டிருந்தால் அதையும் பயன்படுத்த முடியாது.
மேலும் உங்கள் கடன் EMI தொகைகள் ஆட்டோ டெபிட் ஆகாமல் போகும், இதனால் கடன் குழப்பமடைய வாய்ப்பு உள்ளது. ஆகவே கேஆய்சி சரிபார்ப்பது அவசியம்.
இந்த கேஆய்சி சரிபார்ப்புக்கு கிராமப்புறங்களில் ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை கிராம பஞ்சாயத்துகளில் முகாம்கள் நடாத்தப்படுகின்றன. அந்த முகாம்களில் கலந்துகொண்டு உங்கள் வங்கிக் கணக்குக்கான கேஆய்சி அப்டேட்டை முடிக்கலாம். அல்லது உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கு சென்று கூட இந்த பணியை செய்யலாம்.
கேஆய்சி ஆன்லைனும் செய்யலாம். அதற்கு முதலில் உங்கள் வங்கியின் இணையதளத்திற்கு சென்று நெட் பேங்கிங்கில் உள்நுழைய வேண்டும். அங்கு கேஆய்சி அப்டேட் செய்யும் விருப்பத்தைத் தேர்வு செய்து, ஆதார், பான் மற்றும் பிற தேவையான ஆவணங்களை இணைத்து செட்டபிட் செய்ய வேண்டும்.
செயலிழந்த கணக்கை மீண்டும் செயல்படுத்த, நீங்கள் குறைந்தது ஒரு பரிவர்த்தனையை செய்ய வேண்டும் அல்லது வங்கிக் கிளைக்கு சென்று விண்ணப்பத்துடன் கேஆய்சி சரிபார்ப்பை புதுப்பிக்க வேண்டும்.