Friday, April 18, 2025

இதையெல்லாம் ஆன்லைனில் தேட வேண்டாம் : வங்கிகள் எச்சரிக்கை

வங்கி கிளை தொடர்பு எண்கள், ஆன்லைன் பேங்கிங் மற்றும் கார்டு புகார்கள் தொடர்பான தகவல்களை வாடிக்கையாளர்கள் பெற வங்கிகள் அதிகாரப்பூர்வமாக வழங்குகின்றன. நேரில் வங்கிக்கு செல்ல முடியாத சந்தர்ப்பங்களில், பலர் இணையதளத்தின் மூலம் தங்கள் வங்கியின் பெயரைத் தேடி, வாடிக்கையாளர் சேவை மைய எண்களை பெறுகின்றனர். இதில் சில செல்போன் எண்களும் காணப்படும்.

சமீப காலமாக, மோசடி கும்பல்கள் இந்த எண்ணுகளை மாற்றி, தவறான தகவல்களை வழங்கி, வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகின்றனர். உண்மைத்தன்மை தெரியாமல் பலர் அந்த எண்களுக்கு அழைத்துக் கொண்டிருப்பதால், மோசடி கும்பல் நம்பகத்தன்மையற்ற லிங்க்களை பகிர்ந்து, பண மோசடியில் ஈடுபடுகிறது.

இதனால், வங்கி தொடர்பான எதையும் ஆன்லைனில் தேடாமல், நேரடியாக வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று சரியான தகவல்களை அறிந்து கொள்வது பாதுகாப்பான வழியாக இருக்கும் என்று வங்கி அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

Latest news