சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு, 159 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.
இதனை அறிந்த விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விமானம் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த 159 பயணிகள் உயிர் தப்பினர். இதையடுத்து வேறொரு விமானம் மூலம் பயணிகள் அனைவரையும் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனர்.