த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன.
இந்நிலையில் மாநாட்டிற்கு கிராமத்திலிருந்து வந்த பொதுமக்கள் தண்ணீர் இன்றி சிரமம் அடைந்துள்ளனர். காலை 11 மணிக்கே அங்கு வைத்துள்ள தண்ணீர் டேங்கில் குடிநீர் வரவில்லை என கூறியுள்ளனர்.