தண்ணீருக்கு அடியில் நீண்டதொலைவு நடந்து
உலக சாதனைபுரிந்துள்ளார் இளைஞர் ஒருவர்.
குரோஷியாவில் உள்ள ஒரு மருத்துவமனை
இதயம், நுரையீரல், முடக்குவாத நோய்களுக்கு
சிகிச்சை அளித்துவருகிறது. இதுதொடர்பான
விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பியது.
அதற்காக மருத்துவமனையின் நீச்சல் குளத்தில்
நீருக்கு அடியில் நடந்துசெல்லும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டது.
அதில் கலந்துகொண்ட டைவ் வீரர் விட்டோமிர் மரிசிக்
3 நிமிடம், 6 விநாடிகளில் 107 மீட்டர் தொலைவு நடந்து
உலக சாதனை புரிந்துள்ளார். 50 மீட்டர் நீளமுள்ள
அந்த நீச்சல் குளத்தில் இரண்டு சுற்றுகளுக்குமேல்
சிறிது தூரம் நடந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அவரது ஒரு கால் தரையில் ஒன்றியிருப்பதற்காக
மற்றொரு காலில் எடையைக் கட்டியிருந்துள்ளார்.
இந்த சாதனை புரிவதற்காக தான் பயிற்சி ஏதும்
மேற்கொள்ளவில்லை என்று விட்டோமிர் மரிசிக்
தெரிவித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில்
ஆழ்த்தியுள்ளது.