பானிபூரிக்குள் மோதிரம் வைத்து காதலைச் சொன்ன இளைஞன்

232
Advertisement

பானிபூரி ஓர் உணவுப் பொருளாகத்தான் நமக்கெல்லாம் தெரியும்.
ஆனால், காதல் பித்துப்பிடித்த இளைஞன் ஒருவனுக்கு அதுவே ஒரு
தூதுப்பொருளாக அமைந்து வெற்றியைத் தந்துள்ளது.

காதலைச் சொல்ல பானிபூரி ஒரு தூதுசொல்லும் தோழியாகப்
பயன்படுத்தியுள்ள இளைஞரின் இந்தச் செயல் பலரது புருவங்
களையும் உயர்த்தியுள்ளது.

ஒரு பெண்ணின்மீது காதல் வந்துவிட்டால் அதனை அப்பெண்ணிடம்
வெளிப்படுத்தி ஏற்றுக்கொள்ள வைக்கும்வரை ஆண்களுக்கு ஒரே
தவிப்புதான்.

போர்க்கள வீரன்கூட காதலைச் சொல்வதற்குத் தயங்குவதற்குக்
காரணம், எங்கே தான் விரும்பும் பெண் காதலை ஏற்றுக்கொள்ள
மறுத்துவிடுவாளோ என்கிற பயம்தான்.

எவ்வளவுதான் மூளையைக் கசக்கி யோசித்தாலும் பெண்ணிடம்
காதலை வெளிப்படுத்துவதற்கான சக்ஸஸ் பார்முலாவை இதுவரை
யாரும் கண்டுபிடிக்கவில்லை.

இத்தகைய காதல் உலகில் தன் காதலை வித்தியாசமான முறையில்
வெளிப்படுத்தி காதலை ஏற்கவைத்துள்ளார் இளைஞர் ஒருவர். யாரும்
யோசித்திராத அந்த வித்தியாசமான வழி என்ன தெரியுமா…?

பானிபூரியும் தங்க மோதிரமும் தான் இந்த காதலுக்கான தூதுவர்கள்.

பலரும் விரும்பிச் சாப்பிடும் பானிபூரியைத் தேர்வுசெய்துள்ளார் இந்த
இளைஞர். தனக்குப் பிடித்த பானிபூரிக்குள் திருமணத்துக்கான வைர
மோதிரத்தை வைத்துத் தன் கேள் பிரண்டிடம் புரோபோஸ் செய்துள்ளார்.

அந்தப் பெண்ணும் பானிபூரியைத் தவிர்க்க முடியாமல் தயக்கத்துடன்
காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தப் பெண் பிஎச் டி பயின்றுவருவதாகத்
தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலகிலேயே பானிபூரி மூலம் காதலைச் சொன்ன ஒரே நபர் இவராகத்தான்
இருக்கும். பசி நேரத்தில் தின்பண்டமாக விளங்கும் பானிபூரியைக் காதலைப்
புரோபோஸ் பண்ண பயன்படுத்திய இந்த இளைஞரின் செயலைப் பலரும்
பாராட்டிவருகின்றனர்.

கற்பனை செய்துகூட பார்த்திராத காதலுக்கான இந்தப் புதுவழியைப் பற்றி
இளைஞர்கள் பலர் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

காதலைச் சொல்ல வழிதெரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கும்
ஒருதலைக் காதலில் சிக்கியுள்ள இளைஞர்கள் பலரும் இவரைப் போன்றே
புதுமையாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.