பாம்பு ஸ்கிப்பிங் செய்த இளைஞர்

334
Advertisement

பாம்பைக்கொண்டு ஸ்கிப்பிங் செய்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பான வீடியோ ஒன்று ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோ பதிவில், இளைஞர் ஒருவர் பாம்பைப் பயன்படுத்தி ஸ்கிப்பிங் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த இளைஞர் கயிற்றைப்போல் பாம்பை லாவகமாகப் பிடித்து எவ்விதத் தயக்கமும் பயமும் இன்றி மிகுந்த ஈடுபாட்டோடு ஒரு தார்ச்சாலையின் நடுவே நின்று அசத்தலாக ஸ்கிப்பிங் செய்கிறார்.

சில விநாடிகள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்தபிறகு, அந்தப் பாம்பை சாலையோரம் குவிந்துகிடக்கும் குப்பைக்குள் வீசிவிட்டுச் செல்கிறார். அதன்பின்னர்தான் தெரிய வந்தது அந்த இளைஞரின் கையில் இருந்தது செத்துப்போன பாம்பு என்று.

அந்த இளைஞர் மும்பையை அடுத்துள்ள பால்கர் என்னும் பகுதியில் இந்த துணிகரச் செயலை மேற்கொண்டுள்ளார்.

இளைஞரின் செயலைப் படம்பிடித்தவர் அதை வலைத்தளங்களில் பரவ விட தற்போது வைரலாகத் தொடங்கியுள்ளது பாம்பு ஸ்கிப்பிங்.