உலகின் மிகச்சிறிய தொன்மையான தங்க பைபிள்

41
Advertisement

உலகின் மிகச்சிறியதும் தொன்மையானதுமான தங்க பைபிள் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் லேன்செஸ்டர் நகரைச் சேர்ந்தவர் நர்ஸ் பஃப்லி பெய்லி. இவர் தன்னுடைய கணவர் இயானுடன் வடக்கு யார்ஷயர் நகரிலுள்ள ஷெரிப்ஹட்டன் கோட்டைக்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் மெட்டர் டிடெக்டர்மூலம் தேடிக்கொண்டிருந்தார்.

அப்போது மெட்டர் டிடெக்டரின் சிக்னல் மின்னியது. அதைத் தொடர்ந்து அந்த இடத்தை 5 அங்குலம் தோண்டியபொழுது ஒரு சிறிய தங்க பைபிளைக் கண்டுபிடித்தார். அந்த பைபிள் ஒன்றரை செ.மீ நீளமும், 5 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Advertisement

இந்த நிலம் இங்கிலாந்தை 15 ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மூன்றாம் ரிச்சட் என்ற மன்னருக்குச் சொந்தமான நிலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாகக்கூறிய பஃப்லி பெய்லி, நானும் எனது கணவரும் உலோகங்களைக் கண்டுபிடிப்பதற்காக நாடு முழுவதும் உலோகத்தைக் கண்டறியச் செல்கிறோம். முதலில் யோர்க் நகருக்குச் செல்ல முடிவுசெய்தோம்.

ஏனென்றால், அது வரலாற்றைக் கொண்டுள்ளது. முதலில் அந்தப் பைபிளை வயதான ஆட்டின் காது என்று நினைத்தேன். களிமண்ணை அகற்றிப் பார்த்தபோதுதான் அது பைபிள் எனத் தெரிந்தது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தப் பைபிள் யோர்க் நகரிலுள்ள யார்க்ஷையர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தொன்மையான இந்த பைபிள் 1.3 மில்லியன் டாலர் மதிப்புள்ளது.