Wednesday, January 22, 2025

தன்னைத் தானே திருமணம் செய்த பெண்…

மாடல் அழகி ஒருவர் தன்னைத் தானே திருமணம்
செய்த விஷயம் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி வருகிறது.

கிரிஸ் கேலரா என்னும் பிரேசிலியா நாட்டுப் பெண்
அங்குள்ள சர்ச் ஒன்றில் தன்னைத் தானே
திருமணம் செய்துகொண்டதை பிரேசில் நாட்டுப்
பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

33 வயதான அந்தப் பெண் தன்னுடைய
கடந்தகால வாழ்க்கையால் வெறுப்படைந்துள்ளார்.
விரக்தியின் விளிம்புக்கே சென்ற அவருக்குத் திடீரென
ஒரு யோசனை தோன்றியுள்ளது.

இனி, எவருடனும் வாழாமல் தன்னந்தனியாகவே
வாழலாம் என்பதே அந்த யோசனை. அந்த யோசனையை
செயல்படுத்த விரும்பிய கிரிஸ் கேலரா, அதற்காகப்
பிரேசில் நாட்டின் பிரபலமான கத்தோலிக்க சர்ச்
ஒன்றில் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டுள்ளார்.

உறவினர்கள், நண்பர்கள் இந்தத் திருமணத்தில்
கலந்துகொண்டு கிரிஸ் கேலராவை வாயார
வாழ்த்தியுள்ளனர் என்பதுதான் ஹைலைட்.

இதுகுறித்துப் புதுமணத் தம்பதி(???!!!) கிரிஸ் கேலரா,
”நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினேன்.
அதற்காக என்னை நானே திருமணம் செய்துகொண்டேன்.
இது எனக்கு மகிழ்ச்சியானதாக இருந்தது.
என் திருமணம் பற்றி விமர்சிப்பவர்களின் கருத்துகளைப்
பற்றிக் கவலைப்படுவதில்லை” என்கிறார்
வெட்கம் கலந்த புன்னகையோடு.

இதுபோன்ற நிலை ஏற்பட்டால்….திருமணத்துக்கு
வரன் தேடும் அவசியமே ஏற்படாதோ…..

அப்படியெனில், எதிர்காலம் எப்படியிருக்கும்…
ஒளிமயமாக இருக்குமா….இருண்டதாக இருக்குமா?
ஒரே குழப்பமா இருக்குல்ல…

Latest news