ரயில் நிலையத்தில் காவலரை
செருப்பால் அடித்த பெண்

48
Advertisement

ரயில் நிலையத்தில் காவலரை செருப்பால் அடித்த
பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில்
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நகரிலுள்ள சார்
பாக் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த சம்பவம் இடம்
பெற்றுள்ளது.

அந்த வீடியோக் காட்சியின்படி, தன்னிடம் தவறாக
நடக்க முயன்றதாகக்கூறி ஒரு பெண் காவலர் ஒருவரை
செருப்பால் அடிக்க, அந்தக் காவலரோ பெண்ணோடு
வந்த ஆணை லத்தியால் தாக்குகிறார். இதனால்,
ஆவேசமடையும் அப்பெண் மறுபடியும் அந்தக்
காவலரை செருப்பால் அடிக்கிறார்.

Advertisement

காவலரோ அந்தப் பெண்ணை கையால் தள்ளிவிடுகிறார்.
உடல் வலிமையற்ற அந்தப் பெண்ணும் கீழே விழுந்தாலும்
எழுந்து மீண்டும் காவலரை செருப்பால் தாக்குகிறார்.

எத்தனை சட்டங்கள் வந்தாலும் பெண்ணுக்குப்
பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதானோ?

தன்னைப் பெற்றதும் ஒரு பெண்தான், தன் சகோதரி,
மனைவியும் பெண்கள்தான் என்பதை நினைத்தால்,
எந்த ஆணும் பெண்ணிடம் வரம்பு மீறமாட்டார்கள்.
ஆனால், அதனையும் பெற்ற தாய்தான் ஆணுக்கு
உணர்த்த வேண்டும்.