தலைமுடியையே ஆடையாக மாற்றிய பெண்

183
Advertisement

காலம் மாறுகிறது போலும். கற்காலம்போல தற்போது
ஒரு பெண் நீண்ட கூந்தல் வளர்த்துள்ளார். அந்தக் கூந்தலையே
தனது மேலாடை மற்றும் கீழாடைபோல அலங்கரித்து அணிந்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் அழகு சேர்ப்பது தலைமுடி.
அதிலும் பெண்களுக்கு நீண்ட கூந்தலே மிகுந்த அழகு தரும்.
அதனால், கூந்தலை நீளமாக வளர்த்து அதையே விதம்விதமாக
அழகுபடுத்தி தங்களின் அழகுக்கு அணி சேர்ப்பர்
நம் நாட்டுப் பெண்கள்.

ஆனால், வெளிநாட்டிலுள்ள ஒரு பெண் தனது கூந்தலையே
நீளமாக வளரவிட்டு அதையே ஆடைபோல் மாற்றி
அணிந்து மேலும் அழகாகியுள்ளார்.

சமூக வலைத்தளவாசிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது
இந்தப் பெண்ணின் வீடியோ.

கற்காலத்தில் இலைதழைகளையே ஆடையாக அணிந்துவந்தனர் மக்கள்.
கூந்தலையும் நீளமாக வளர்த்தனர். நாகரிகம் வளர வளர
தலைமுடியை பாப் கட்டிங் செய்ததுடன் நவநாகரிக
ஆடைகளையே அணியத் தொடங்கினர்.

இப்படி இந்தப் பெண்ணுக்கு நீளக்கூந்தல் வளர்ந்ததே பல பெண்களுக்கு
பொறாமையா இருக்கு-…அதையே ஆடையா அணிந்து டிரெஸ்
செலவையும் தையல் செலவையும் மிச்சப்படுத்தியுள்ள
இந்தப் பெண்ணைப் பார்த்து இன்னும் கூடுதல் பொறாமை
வருமா வராதா? பட்டிமன்றம் வைத்தால்தான் தெரியுமோ?

மேட்சிங் செலக்ட் பண்றதுக்காக இனி கடைகடையாக
ஏறிஇறங்கத் தேவையில்லை. இந்த மாதிரி நீளமாகக்
கூந்தல் வளர்த்தால் போதும்.

துணி தைக்கத் தேவையில்லை. கை வலிக்கத் துணி
துவைக்கத் தேவையில்லை. அயர்ன் பண்ணத் தேவையில்லை.
பணமும் நேரமும் மிச்சம். நிம்மதியும் கூட.

பிட்டிங்ஸ் சரியா இருக்கா….அவ்வளவுதான் ….
கவலைய விடுங்க….தோழிகளே… சட்டுனு குளிச்சி பட்டுனு புறப்பட்றலாம்…..
இருக்கறவுக அள்ளி முடிஞ்சுக்கிறாக…..