விமானத்தில் பூனைக்குப் பாலூட்டிய பெண்

336
Advertisement

விமானத்தில் பூனைக்குப் பாலூட்டிய பெண்ணைப் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபோன்ற விந்தையான சம்பவங்கள் நம்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. சமூக வலைத்தளங்களின் வருகையால் அவை உடனே வெளியுலகுக்குத் தெரிந்துவிடுகின்றன.

2021ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் Delta Airles 1360 விமானம் ஒன்று சிராகஸ், நியூயார்க், அட்லாண்டா, ஜார்ஜியாவுக்கு இடையே பயணித்துக் கொண்டிருந்தது. விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது பூனையின் மெல்லிய சத்தம்கேட்டுத் திரும்பிப் பார்த்தார் ஒரு பயணி.

அப்போது ஒரு பெண் பயணி தனது பூனைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறார். அதைப் பார்த்ததும் உடனடியாக இந்தச் செயலை Aircraft Communications Addressing And Reporting Systerms (ACARS) மூலம் விமானத்திலுள்ள Red Coatக்குத் தகவல் தெரிவித்தார். அத்துடன் விமானம் தரையிறங்கியதும் இதுபற்றிக் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அங்குவந்த விமானப் பணிப்பெண், பால் கொடுப்பதை நிறுத்தச் சொல்லியுள்ளார். அதற்கு அந்தப் பெண் பயணி மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் செய்தி ஒன்று உள்ளூர் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த சம்பவம் வைரலாகத் தொடங்கியது.