Monday, August 4, 2025
HTML tutorial

தாசில்தாரை துடைப்பக் கட்டையால் அடித்த பெண்.. என்ன நடந்தது??

லஞ்சம் வாங்கிய தாசில்தாரை பார்த்திருப்போம். ஆனால் ஒரு பெண் வீட்டிக்குள் நுழைந்து தர்ம அடி வாங்கிருக்கிறார் ஒரு தாசில்தாரை பார்த்திருக்கீங்களா?..

அதாவது, ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டை மண்டலம் வகாடு தாசில்தாராக பணிபுரியும் ராமையா, இதற்கு முன்பு பெல்லக்கூர் தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். அப்போது பெல்லக்கூர் VRO-வாக பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு தாசில்தார் பாலியியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பெண் VRO பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராமையா வகாடுக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் பெண் VRO மொபைல் போனுக்கு ஆபாச மெசேஜ் செய்துள்ளார்.

மேலும் நிர்வாண அழைப்புகள் செய்ததாக கூறப்படுகிறது.குறிப்பபாக நான் உன் வீட்டிற்கு வந்தால் சிக்கன் சமைப்பாயா? நான் கேட்டதை தருவாயா?” என்று மொபைல் போனில் அனுப்பியதாக சொல்லப்படுகிறது . இந்த நிலையில், புதன்கிழமை இரவு அவரது பெண் VRO வீட்டிற்குச் சென்ற தாசில்தார்.வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்டு பெண் VRO முன்னாடி நிர்வாணமாக நின்ற நிலையில் VRO-வை துன்புறுத்தியதாக அந்த பெண் VRO குற்றம் சாட்டினார்.

இதனைப் பற்றி ஏற்கனவே அந்த பெண் VRO இந்த விஷயத்தை தனது தாயிடம் கூறியிருந்தார். இந்த நிலையில் தாசில்தார் ராமையா VRO வீட்டின் அறைக்குள் வந்து ஆடைகளை கழற்றியபோது, அவர் தனது தாயை அழைத்தார். மறைந்திருந்த, VRO-வின் தாய் தாசில்தார் ராமையாவை துடைப்பத்தால் தாக்கினார். இதனை எதிர்பாராத தாசில்தார் நிர்வாணமாக இருந்தவர் உடனடியாக தனது ஆடைகளை அணிந்துகொண்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு சூழல் நிலவியது, நிர்வாணமாக இருந்த தாசில்தார் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலகி உள்ளது.

இந்த நிலையில் தாசில்தார் ராமையாவின் இதற்கு முன்பு பெல்லக்கூர் தாசில்தாராகப் பணியாற்றியபோது, அவருக்கும் பெண் வி.ஆர்.ஓவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த அறிமுகம் இருவருக்கும் இடையே திருமணத்திற்குப் புறம்பான உறவாக மாறியது. ராமையாவின் தாய் வீட்டில் இல்லாதபோது பல முறை அவர்களது வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், ராமையா அங்கிருந்து வகாடுக்கு மாற்றப்பட்ட பிறகும் இருவருக்கும் இடையேயான பாலியல் உறவு கட்டாயப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனது மீது மோகம் கொண்ட தாசில்தார் ராமையாவை பெண் வி.ஆர்.ஓ. தனது வீட்டிற்கு வரவழைத்துத் தாக்கியதாக ராமையா தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் தீவிரமாக எடுத்து கொண்டு அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News