காரின்மேல் ரொட்டி சுட்ட பெண்

275
Advertisement

அடுப்பைப் பயன்படுத்தாமல் தனது புத்திசாலித்தனத்தால் காரின்மேல் ரொட்டி சுட்ட
பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பெண்கள் இயல்பாகவே புத்திசாலிகள்தான். கிராமமோ நகரமோ கற்றவரோ கல்லாதவரோ
ஏழையோ வசதியோ பெண்கள் அனைவரும் பிறப்பிலேயே ஆண்களைவிட புத்திசாலிகள்தான்.
அதனை நிரூபிக்கும் விதமாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி காரின் பேனட்மீது
ரொட்டி சுட்ட செயல் அனைவரையும் கவர்ந்துவருகிறது.

இதுதொடர்பான வீடியோ ஒன்று ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோக் காட்சியில் சோலார் அடுப்பைப்போல் காரின் பேனட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம், சோனோபூர் நகரைச் சேர்ந்த இளம்பெண் காரின் பேனட்மீது பூரிக்கட்டையில்
ரொட்டி மாவை வைத்து உருட்டுகிறார். உருட்டி முடித்ததும் ரொட்டிக் கல் மீது வைத்து சுடுவதற்குப் பதிலாகக் காரின் பேனட்மீது வைத்து சுடத் தொடங்குகிறார். பிறகு தோசைக்கரண்டியால் ரொட்டியை மாற்றிப்போடுகிறார். இந்தக் காட்சியை அருகிலுள்ளவர்கள் வியப்போடும் ஆர்வமுடனும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்தக் காட்சிதான் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் மார்ச் மாதம் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்து ராஜஸ்தான், மகாராஷ்டிரா
உள்ளிட்ட சில மாநிலங்களில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. இந்த வெப்ப நிலை நீடித்தால்
மே மாதத்தில் பருப்பு மற்றும் சப்ஜியையும் தயார்செய்துவிடலாம் என்று நெட்டிசன்கள் நகைச்
சுவையாகக் குறிப்பிட்டுள்ளனர்.