https://www.instagram.com/p/CWyamppvZgH/?utm_source=ig_web_copy_link
சுகப்பிரசவம் ஏற்படுவதற்காகத் தானே சைக்கிள் ஓட்டி மருத்துவமனைக்குச் சென்ற பெண் எம்பியின் செயல் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜுலி ஆன் ஜென்ட்டர். கர்ப்பிணியாக இருந்த கிரீன் பார்ட்டி எம்பியான ஜுலி பிரசவ வலி ஏற்பட்டதும் சைக்கிள் ஓட்டி மருத்துவமனைக்குச் சென்ற ஒரு மணி நேரத்தில் சுகப்பிரசவம் ஏற்பட்டது.
இதுதொடர்பாகத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜுலி இன்று அதிகாலை 3,04 மணியளவில் எங்கள் குடும்பத்தின் புதிய குடும்ப உறுப்பினரை நாங்கள் வரவேற்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
2018ல் தனது முதல் பிரசவத்தின்போதும் இதுபோலவே செய்தார் ஜுலி.
பெண் எம்பியின் இந்தச் செயல் பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளது.
தற்போதைய சூழலில் பல பெண்கள் சிசேரியன்மூலம் குழந்தை பெற்றுவருகின்றனர். இதனால் உடல் பருமன் ஏற்பட்டு பல அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். அத்தகைய பெண்களுக்கு நியூசிலாந்து பெண் எம்பியின் செயல் வழிகாட்டியாக அமைந்துள்ளது.
சுகப்பிரவசம் ஏற்படும்போது செலவும் குறைவு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது மருத்துவர்களின் கருத்து.