செல்லப்பிராணி மறைவுக்கு விருந்து வைத்த கிராமம்

322
Advertisement

தங்களின் மகன்போல வளர்த்துவந்த செல்லப்பிராணியின் மறைவைத் தாங்கமுடியாமல் 500 பேருக்கு விருந்து வைத்துள்ளனர் ஃபாஸ்ட் ஃபுட் உணவக உரிமையாளர்கள்.

ஒடிசா மாநிலம், பத்ரக் மாவட்டம், பத்ரக் பகுதியைச் சேர்ந்தவர் சுஷாந்த் பிஸ்வால். ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் நடத்தி வரும் இவரிடம் சம்பி என்ற நாய்க்குட்டி 13 ஆண்டுகளுக்குமுன் வந்துசேர்ந்தது. அதனைத் தன் மகள்போல வளர்த்துவந்தார்.
சம்பி தெரு நாய்களோடு சேராது. இரவில் கடையினுள்ளேயே படுத்துறங்கும்.
என்றாலும், சம்பி பத்ரக் பகுதி முழுவதிலுள்ள ஃபாஸ்ட் ஃபுட் கடைக்காரர்கள் அனைவரின் செல்லப்பிராணியாகவே வலம்வந்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும்விதமாகத் திடீரென்று சம்பி இறந்து போனாள். சம்பியின் இறப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பத்ரக் பகுதி வியாபாரிகள் துக்கத்தில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில் சம்பியின் 11 ஆம் நினைவு நாளில் அங்குள்ளவர்கள் திவசம் அனுசரித்தனர். அதையொட்டி பிஸ்வால் கடையின்முன் சம்பியின் புகைப்படத்தைப் பேனரில் வைத்து தோற்றம், மறைவு என்று சம்பியின் விவரங்களைக் குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தினர். அத்துடன் அப்பகுதியிலுள்ள 500 பேரை வரவழைத்து உணவு பரிமாறியுள்ளனர்.

அனைவரின் இதயங்களையும் வருடிவரும் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.