உயிரைக் கொல்லும் உணவுப்பொருட்கள்!

499
Advertisement

உயிரைக் கொல்லும் உணவுப் பொருட்கள்  பட்டியலில் இருக்கும் சில உணவுப் பொருட்களைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

அதில் முதலிடம் பெறுவது பலூன் மீன். இந்த மீனில் டெட்ரோடோடாக்சின் என்னும் விஷம் உள்ளது. சயனடைவிட இது கொடிய விஷமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த மீனைக் கொண்டு ஜப்பானில் உணவு சமைக்கப்படுகிறது. அதை அனைவரும் விரும்பி உண்ணுவார்களாம்.

இந்த மீனின் மூளை, தோல், கண்கள், கருப்பை, குடல் ஆகியவை விஷம் நிறைந்தவை என்பதால், நிபுணர்களால் முறையாக அவை நீக்கப்பட்ட பின்னரே சமைக்கப்படுகின்றன.

அடுத்தபடியாக, இந்தப் பட்டியலில் இடம்பெறுவது சிவப்பு சோயா பீன்ஸ்.  புரதம், நார்ச்சத்து, ஊட்டச்சத்து ஆகியவை இருந்தாலும் எளிதில் செரிமானமாகாத கொழுப்பு பகுதியையும் கொண்டிருக்கின்றன இந்த பீன்ஸ் வகைகள்.

இந்த சிவப்பு சோயாவை உண்பதால் அடிவயிற்றுக் கோளாறு, வாந்திபேதி ஆகியவை ஏற்படலாம். சமைப்பதற்கு முன் 12 மணி நேரம் இந்த பீன்ஸ்கள் நீரில் ஊறவைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் அதனை வேகவைத்து சாப்பிட வேண்டுமாம்.மூன்றாவது இடம்பெறுவது ஜாதிக்காய். இந்தோனேசியாவைப் பூர்வீகமாகக்கொண்ட இந்த ஜாதிக்காய் ஏராளமான மருத்துவக் குணங்களை கொண்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவை மீறினால், வாந்தி, மயக்கம், வலி, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படலாம்